குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராயக்கோட்டை பாஞ்சாலி நகரைச் சேர்ந்த தம்பதியினர் மணிவண்ணன் – அமுதா. கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையடைந்த அமுதா கடந்த 6ஆம் தேதி எலிக்கு வைக்கும் பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அமுதாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல் நிலையத்தில் அமுதாவின் தந்தை பழனிவேல் புகாரளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.