Categories
உலக செய்திகள்

பாதுகாப்பான நாடுகள் பட்டியலில்… நீக்கப்பட்டுள்ள பிரபல நாடு… வெளியான புதிய கட்டுப்பாடுகள்…!!

பிரிட்டனில் ஐக்கிய அரபு அமீரகம் பாதுகாப்பான நாடுகள் என்ற பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் ஜனவரி 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 4 மணி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பும் அனைத்து மக்களும் சுயமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் Grant Shapes அறிவித்துள்ளார். மேலும் இந்த கட்டுப்பாடுகள் அபுதாபி, துபாய், அஜ்மான், புஜைரா, உல்அம்-குவைன் மற்றும் ஷார்ஜா மற்றும் அல் கைமா போன்ற பகுதிகளுக்கு பொருந்தும்.

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, துபாய் போன்ற பிரபலமான விடுமுறை பகுதிகள் இருக்கின்றன. மேலும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போதும் சில பிரபலங்கள் மற்றும் செல்வந்தர்கள் சில வாரங்களாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளனர். மேலும் குறிப்பிட்ட சில முக்கிய காரணங்களை தவிர வெளிநாடுகளுக்கு மக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதை Grant Shapes மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

Categories

Tech |