வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டருக்கு 10% கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது. அதை எவ்வாறு பெறுவது என்பதை இதில் பார்ப்போம்.
தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்கள் நாடு முழுவதும் 700 முதல் 750 வரை விற்கப்பட்டு வருகிறது. பல்வேறு செயலிகள் மூலம் முன்பதிவு செய்யும்போது நமக்கு கேஷ்பேக் கிடைக்கின்றன. தற்போது ஐசிஐசியின் செயலி மூலம் முன்பதிவு செய்யும்போது நீங்கள் புக் செய்யும் விலையில் உங்களுக்கு 10% கேஷ்பேக் கிடைக்கின்றது. இதனை எவ்வாறு பெறலாம் என்பதை பார்க்கலாம். முதலில் ஐசிஐசிஐயின்பாக்கெட் வாலெட் கணக்கைத் தொடங்கவேண்டும். அதில் pay bills பகுதியில் எல்.பி.ஜி என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யவேண்டும்.
இதில் கேட்கப்படும் உங்களது விநியோகஸ்தர்கள், நுகர்வோர் எண் போன்ற விவரங்களை கொடுக்கவேண்டும். பின்னர் கேஷ்பேக் பெற PMRJAN2021 என்ற கோடை உள்ளீடு செய்யவேண்டும். பின்னர் உங்களது முன்பணத்தினை செலுத்தவேண்டும். சிலிண்டர் பதிவு செய்த 10 தினத்திற்குள் உங்களது வங்கிக் கணக்கிற்கு 10% தொகை அதிகபட்சமாக ரூ.50 உங்களுக்குத் திரும்பக்கிடைக்கும்.