Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொடூரம்…! சிறுமி நடந்த கொடுமை…. நாடு முழுவதும் வெடித்த போராட்டம் …!!

பாகிஸ்தானில் சிறுமி இஷால் அப்சல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.

பாகிஸ்தான் நாட்டில் பைசலாபாத்தில் லியாகத் கிராமத்தைச் சார்ந்தவர் அப்சல் மாசிஹ். இவருடைய மகள் இஷால் அப்சல் என்பவர் ஜனவரி 6ஆம் தேதி காலை 8.30 மணிக்கு அவர் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் வெகு நேரமாகியும் சிறுமி திரும்பி வரவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் தேடி அலைந்தும் கிடைக்காததால் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் பைசலாபாத் அடுத்துள்ள குளம் அருகில் ஒரு சிறுமியின் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த உடல் காணாமல் போன சிறுமியின் உடல் தான் என்பதை உறுதி செய்த பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த பரிசோதனையில் சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருப்பதை மருத்துவர்கள் அறிக்கையில் நிரூபித்துள்ளனர். மேலும் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களை விடுவித்தது நாடு முழுவதும் பெரும் போராட்டங்களை தூண்டியிருக்கிறது. பாகிஸ்தானில் சிறுபான்மை பெண்களுக்கு எதிராக இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |