Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹேய்..! ஜாலி ஜாலி.. ஸ்டாலின் சுத்தம் செய்யுறாரு…. தேமுதிக மாஸ் காட்டுது…. விஜய் பிரபாகர் பரபரப்பு பேச்சு …!!

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேமுதிகவில் உள்ள குப்பைகளை ஸ்டாலின் சுத்தம் செய்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

திருச்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் 1000 பேருக்கு பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்புபை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் , நகரச் செயலாளர் சதீஷ் குமார் முன்னிலையில், ஒன்றியச் செயலாளர் செல்லதுரை வரவேற்புடன் நடைபெற்றது.

Vijaya Prabhakaran speech about Stalin

பெய்து கொண்டிருந்த மழையில் கூடியிருந்த மக்களிடையே தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியதாவது, விஜயகாந்தின் உடல்நலம் தற்போது நன்கு தேறி வருகிறது. அதற்கு காரணம் தொண்டர்களின் பிரார்த்தனை மட்டுமே. தேமுதிக எந்த கட்சிகளுக்கும் சளைத்தது அல்ல.

தேமுதிகவில் இருந்து சிலர் விலகுவதால் கட்சியில் உள்ள குப்பைகள் இப்போது சுத்தமாகி கொண்டு இருக்கிறது. ஸ்டாலின் சென்னையை சுத்தம் செய்தாரா? இல்லையா ?என்று தெரியவில்லை. ஆனால் எங்கள் கட்சியை தற்போது நன்கு சுத்தம் செய்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்.

Categories

Tech |