தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் அரசு அவசரம் காட்ட வேண்டாம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து, கொரோனா பரவல் இன்னும் முழுமையாக நீங்காத காரணத்தால் பள்ளிகள் திறப்பதில் அரசு அவசரம் காட்ட வேண்டாம் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.