இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஒரு எளிமையான கேம் உள்ளது.
நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது மிகவும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கேம் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவ்வாறு கேம் விளையாடுபவர்களுக்கு ஏற்றவாறு புதிய புதிய கேம்கள் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி Infinity loop ஒரு எளிமையான, நிதானமான முடிவற்ற புதிர் விளையாட்டு. திரையில் தோன்றும் சிறு துண்டுகளை நீங்கள் சுற்றி சுற்றி ஒரு முழுமையான அல்லது எல்லையற்ற வடிவங்களாக மாற்ற வேண்டும். இந்த விளையாட்டு நீங்கள் போதுமென்று சொல்லும்வரை விளையாடிக் கொண்டே இருக்கலாம். இதற்கு ஆன்டிராய்டு செயலையும் உள்ளது.