இலங்கையில் பெளத்த துறவிகளின் உண்ணாவிரத போராட்டத்தையடுத்து இரண்டு ஆளுநர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில், அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலே ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இவர்கள் பதவி விலகவேண்டும் என்று பெளத்த துறவியான நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதான தேரோ உள்ளிட்டோர், உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினர் .
அனால் இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் மற்றும் ஆளுநர்கள் மறுத்து வந்த நிலையில், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலே ஆகியோர் தங்களது பதவிகளை தற்போது ராஜினாமா செய்துள்ளனர்.