காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுகவினரை எதிர்த்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பெண்கள் குறித்து தரைகுறைவாக
பேசி வருவதால் அதனைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட கழக அணைத்து பெண்கள் அமைப்பு சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
நகர் முழுவதும் அதிமுகவினர் ஒட்டியிருந்த போஸ்டர்களை திமுகவினர் கிழித்து எறிந்தனர். ஆனால் அதிமுகவினர் திமுகவை கண்டித்து மறுபடியும் போஸ்டர்கள் ஒட்டியதால் திமுக-அதிமுக இடையே சலசலப்பு ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.