முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க உள்ளார்.
சென்னை மெரினாவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் நினைவிட பணி இன்னும் ஓரிரு தினங்களில் முடிய உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பதற்காக வரும் 18ம் தேதி டெல்லி சென்று பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுக்க உள்ளார்.மேலும் முதலமைச்சர் பழனிசாமி ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று பார்வையிட்டு அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.