நேபாளத்திற்கு 2.5 கோடி ஸ்பொட் தடுப்பூசியை அனுப்ப உள்ளதாக ரஷ்ய நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலக நாடுகள் பெரும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
இதையடுத்து நேபாளத்திற்கு 2.5 கோடி ஸ்பொட் தடுப்பூசியை அனுப்ப உள்ளதாக ரஷ்ய நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவிடம் தடுப்பூசி கேட்டிருந்த நிலையில் ரஷ்யாவிடம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கு இந்தியா – நேபாளம் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணம் என்று கூறப்படுகிறது.