தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவர் விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள முனிசிபல் காலனி என்ற பகுதியில் பல் டாக்டரான இந்து என்பவர் வசித்துவருகிறார். இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உதவி பேராசிரியையாக வேலை பார்த்து கொண்டிருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள பல்கலைகழக விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் இந்து தான் தங்கியிருந்த விடுதி அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து உடனடியாக மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்துவின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மறைமலைநகர் போலீசார் இந்து எந்த காரணத்திற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.