கருப்பட்டி சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இப்போது பார்க்கலாம்.
கேடு விளைவிக்கும் சீனிக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தும் பழக்கம் தற்போது தென் மாவட்டங்களில் பிரபலம் ஆகிவிட்டது. அதிலும் கிராமப்புற மக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அங்கு அதிக அளவில் கருப்பட்டி தான் பயன்படுத்துகிறார்கள். இன்றும்கூட நகர்ப்புறங்களில் இருக்கும் பலருக்கு கருப்பட்டி என்றால் என்ன என்பதே தெரியவில்லை. சீனியை சேர்ப்பதால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் கருப்பட்டி இனிப்பு மட்டுமல்ல ஒரு அற்புதமான இயற்கையான மருந்தாகவும் அமைகிறது.
இதன் நன்மைகளை தெரிந்தால் நிச்சயமாக கருப்பட்டி எங்கு கிடைக்கும் என்று நாம் வாங்கி விடுவோம். வேறு எந்த உணவு பொருளையும் இல்லாத நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. சுண்ணாம்புச் சத்தும் இதில் உள்ளது. அதிலும் பெண்களுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்கும் சிறந்த விளங்குகிறது. கிராமத்து பாட்டிகள் இன்றும் ஆரோக்கியமாக உடல் வலிமையுடன் இருப்பதற்கு காரணம் இந்த கருப்பட்டி தான் என்று உங்களால் நம்ப முடியுமா…?? ஒவ்வொரு அங்குலமும் அற்புதமான பலன் கொண்டது பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பதநீரை காய்ச்சி தான் கருப்பட்டி செய்யப்படுகிறது. எனவே சீனிக்கு பதில் கருப்பட்டியை சேர்ப்பது நல்லது.