கான்ட்ராக்டர் வீட்டில் தங்க, வைர நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கோமதிபுரம் என்ற தொகுதியில் ரமேஷ் என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இவர் தனது மகளுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார். அதன்பின் ரமேஷ் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த வைரத்தோடு, 340 கிராம் வெள்ளி பொருட்கள், 3 பவுன் தங்க சங்கிலி, பணம் போன்ற பல்வேறு பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற அந்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.