Categories
தேசிய செய்திகள்

பறிபோன பச்சிளம் குழந்தைகளின் உயிர்… கவர்னர் நேரில் ஆய்வு… தகவல் வெளியிட்ட ராஜ்பவன்…!!

10 பச்சிளம் குழந்தைகள் பலியான பந்த்ரா மருத்துவமனைக்கு மகாராஷ்டிரா மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி இன்று நேரில் செல்லவிருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பந்த்ரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு கடந்த 9ஆம் தேதி, அதிகாலை 1:3௦ மணிக்கு குழந்தைகள் சிறப்பு பிரிவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தில் 1௦ பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக இறந்து விட்டன. ஆனால் அதிஷ்டவசமாக 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர். இதனையடுத்து மருத்துவமனையில் தீ விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த குடும்பத்தினரை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விமானம் மூலம் மும்பையில் இருந்து பந்த்ரா மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இதனைதொடர்ந்து இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  10 பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான பந்த்ரா மருத்துவமனைக்கு மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி இன்று நேரில் செல்லவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |