கோவையில் விமானப்படை அதிகாரி வீட்டில் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பேரூராட்சியை சேர்ந்தவர் ஜோசப். இவர் சூலூர் விமானப்படை தளத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோசப்பின் உறவினர் ஒருவர் இறந்துள்ளார். அதுகுறித்து துக்கம் விசாரிப்பதற்காக ஜோசப் தனது குடும்பத்தினருடன் வடவள்ளி பகுதிக்கு சென்றுள்ளார்.
நேற்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 49 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.