Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருவள்ளுவர் பிறந்த தினம்” Non-Veg கிடையாது…. கமிஷனர் அதிரடி உத்தரவு….!!

வருகிற 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாட உள்ள நிலையில் அன்று இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் மாநகராட்சி கமிஷனர் ஜி. பிரகாஷ் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பது பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் இறைச்சி கூடங்கள், இறைச்சிக் கடைகள் அனைத்தும் வரும் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட இருப்பதால் அரசு உத்தரவின்படி மூடப்பட வேண்டும்.

ஆடு மாடு மற்றும் இதர இறைச்சி கடைகள் அனைத்திலும் விற்பனை செய்வதற்கும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றிலும் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் இறைச்சியை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுபடி 15ஆம் தேதி கண்டிப்பாக அனைத்து இறைச்சிக் கடைகளும் இறைச்சி கூடங்களும் வணிக வளாகங்களும் மற்றும் பல்பொருள் அங்காடிகள் இறைச்சி விற்பனை செய்வதை தவிர்க்கவேண்டும். உத்தரவினை செயல்படுத்துவதற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Categories

Tech |