தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதில் முதல்கட்டமாக ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படுகிறது. அதன்பிறகு மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க தேதி அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.