ஜெர்மனி மருத்துவமனையில் வேலைபார்க்கும் ஆண் செவிலியர் மாரடைப்பு வரவைத்து நோயாளிகளை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மன் நாட்டில் உள்ள டெல்மெர்ன் ஹாஸ்ட் மருத்துவமனையில்ஆண் செவிலியராக பணிபுரிபவர் நீல்ஸ் ஹோஜல். இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. குறிப்பாக இவர் நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுத்தி பிழைக்க வைப்பதாக சுமார் 85 நோயாளிகளை கொன்றுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைகள் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டத்தையடுத்து இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செவிலியர் நீல்ஸ் ஹோஜல் மீது சுமத்தப்பட்ட குற்ற வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த கொலைகளை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் , டெல்மெர்ன்ஹாஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த 90 நோயாளிகளுக்கு மாரடைப்பு வரவைத்ததாகவும் , அதில் 10 பேரை கொன்றதாகவும் , இதில் எனக்கு அவர்களை காப்பாற்றுவது போன்ற உணர்வு மகிழ்ச்சியை தருவதாகவும் விசாரணையில் தெரிவித்தார்.கிட்டத்தட்ட 7 மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் செவிலியர் நீல்ஸ் தாம் 43 கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டார்.