பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெறவுள்ளது . இறுதிப் போட்டி வருகிற ஜனவரி 17-ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. அன்று இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார்? என அறிவிக்கப்படும். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இறுதி போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர் . இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் அனிதா கண் கலங்கியவாறு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார் .
#Day101 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/6PGKCVeFcI
— Vijay Television (@vijaytelevision) January 13, 2021
அவருக்கு மற்ற போட்டியாளர்கள் ஆறுதல் கூறுகின்றனர். சமீபத்தில் தனது தந்தையை இழந்த அனிதா சோகத்தில் உள்ளார் . இதனால் நாங்கள் தான் இனி உனக்கு அப்பா, கவலைப்பட வேண்டாம் என அனிதாவுக்கு மற்ற போட்டியாளர்கள் ஆறுதல் கூறுகின்றனர் . இதையடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் சிவானி மற்றும் சுரேஷ் இருவரும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.