இண்டிகோ மானேஜர் மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் இண்டிகோ அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தில் ரூபேஷ் என்பவர் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது வீடு புனைசாக் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் இருக்கிறது. இந்நிலையில் பணிமுடிந்து ரூபேஷ் அந்த அபார்ட்மெண்டுக்கு எதிரில் காருக்குள் இருந்த போது, திடீரென மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதில் ரூபேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து அவரை சுட்டு கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.