Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலைக்கு போ என வற்புறுத்திய உறவினர்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்… விருதுநகரில் பரபரப்பு…!!

வேலைக்கு செல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் பாண்டியராஜன் வேலைக்கு செல்லாமல் அவ்வபோது கிடைக்கும் பணத்தில் மது அருந்திக்கொண்டு நாட்களை கழித்துள்ளார். இதனால் அவரை வேலைக்கு செல்லுமாறு அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து வேலைக்கு போகாத விரக்தியில் மனமுடைந்த பாண்டியராஜன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசாருக்கு பாண்டியராஜனின் அண்ணன் காளிராஜன் புகார் அளித்துள்ளார். மேலும் போலீசார் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Categories

Tech |