Categories
லைப் ஸ்டைல்

நீங்க இது மாதிரி கனவு கண்டீர்களா?… அதுல என்ன பலன்னு தெரிஞ்சுக்கோங்க…!!!

உங்கள் கனவில் சண்டையிடுவது போல் தோன்றினால் அதனால் என்ன பலன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒரு பலன் உண்டு. கனவின் மூலம் நம் உள் மனம் நமக்கு சமிக்கைகளை அனுப்பும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்தவகையில் நாம் சண்டையிடுவது போன்று கனவு கண்டால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.

சண்டை சச்சரவுகள், அடிதடி, தகராறு போன்றவற்றில் தாங்கள் சிக்கிக்கொண்டு தவிப்பது போல் கனவு கண்டால், தங்கள் வாழ்கை அமைதியானதாகவும், சுற்றியிருக்கும் அனைவருடனும் சுமுக நட்பு கொண்டவராகவும் அமைவீர்கள். அதேபோல் சண்டையில், பிறர் நம்மை அடிப்பது போன்று கனவு கண்டால் நமக்கு பகைவர்கள் இல்லை என்று எடுத்து கொள்ளலாம். பகைவர் இருப்பின் அவர்களும் பகை மறந்து உங்களுக்கு நண்பர்களாக மாறும் சூழல் உண்டாகும்.

Categories

Tech |