நடிகர் மாதவனின் ‘மாறா’ படத்துக்காக நூதன முறையில் ஓவிய விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் மாறா. இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். அபிராமி ,பத்மாவதி ,சிவாடா ,அலெக்சாண்டர் பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியானது . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இந்நிலையில் மாறா படத்திற்காக சென்னை மற்றும் கோயம்புத்தூர் தெருக்களில் நூதன முறையில் ஓவிய விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன .
இந்த ஓவியங்கள் சென்னையை சேர்ந்த கலைஞர்கள் கிரிஸ் பிளேர் வின்சென்ட் மற்றும் லோட்டஸ் ஹெட் ஆகியோரால் வரையப்பட்டுள்ளது. சென்னையில் பெசன்ட்நகர், எழும்பூர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது . பேனர்களிலும் இந்தப்படத்தின் ஓவிய விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மாறா படத்தின் கதை சாரத்தை வெளிப்படுத்தியுள்ள இந்த ஓவியங்கள் நகரத்தை அழகுப்படுத்தி உள்ளது . மேலும் படத்திற்காக வரையப்பட்ட இந்த ஓவியங்கள் பொது மக்களை கவர்ந்து வருகிறது.