பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பாடங்கள் குறைக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. என்னென்ன பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தகவல் வெளியிட வில்லை.
கொரோனா காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதில் பாடங்கள் சரியாக முடிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதன்காரணமாக 9-ம் வகுப்பு வரையில் உள்ள 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 10, 11, 12 மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக 35% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது 19ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில் குறைக்கப்பட்ட பாடங்கள் எவை, என்னென்ன என்பது குறித்த தகவலை அரசு வெளியிடவில்லை. இதனை உடனடியாக வெளியிட வேண்டும் என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.