Categories
சினிமா தமிழ் சினிமா

இது ‘மாஸ்டர்’ பொங்கல் டா… திரையரங்கில் படம் பார்த்த கீர்த்தி போட்ட ட்வீட்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் திரையரங்கில் மாஸ்டர் படம் பார்த்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தளபதி விஜயுடன் இணைந்து பைரவா மற்றும் சர்க்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தீவிர விஜய் ரசிகரான இவர் தளபதியின் பிறந்தநாளுக்கு மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலை வயலினில் இசைத்து வாழ்த்துக் கூறினார். இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக விஜய்யின் மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது .

இந்த படத்தை பார்த்த ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் திரையரங்கில் மாஸ்டர் படம் பார்த்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் . அதில்’ ஒரு வருடத்திற்கு பின் திரையரங்கில் இப்படி ஒரு படத்தை பார்ப்பது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது, இது மாஸ்டர் பொங்கல் டா ‘ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |