ஜாதி,மதம் பார்க்காமல் சாதனையாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் கூடிய விரைவில் நடக்க உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தங்களது பரப்புரையில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று, கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டை வழியாக, பொள்ளாச்சி, ஊஞ்சவேலம்பட்டி, தேர்முட்டி, திருவள்ளுவர் திடல், காந்திசிலை ஆகிய பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டு அவர் பேசியதாவது,வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் சாதி மதம் பார்க்காமல் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இம்மண்ணில் பாலியல் சம்பவம் நடந்து 600 நாட்கள் ஆகியும் இன்னும் அதற்கு நீதி கிடைக்கவில்லை. எனவே பாலியல் குற்றங்களுக்கு இடம் தரக்கூடாது. வரும் தேர்தலில் நீங்கள் விதையைத் தூவினால் நாளைய அரசியலில் மாற்றம் ஏற்படும். கொள்ளையடிக்கும் கும்பலுக்கு வாய்ப்புகளை தராமல், இனியும் காலம் தாழ்த்தாமல் நல்லவர்களுக்கு வலியை விட வேண்டும் என்றார்.