பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு எடப்பாடி பழனிசாமி பச்சைத் துரோகம் செய்து வருவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு அனைத்தையும் செய்து தருவதாக கட்சியினர் வாக்குறுதி அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிறு விவசாயி மற்றும் பெரும் விவசாயி என்ற பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி”என்று முக.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.