திருப்பூரில் மினி கிளினிக்கை தொடங்கி வைத்த பொள்ளாச்சி ஜெயராமன் பாஜகவிற்கு அதிமுக அடிமை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பெரிய தோட்டம், வாலிபாளையம் ஆகிய பகுதிகளில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார்.
பின்பு அவர் பொதுமக்களிடம் பேசியதாவது, பாஜகவிற்கு அதிமுக அடிமையாகி விட்டது என்று சில பரப்புரைகளிள் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு பல்வேறு நலத் திட்டங்களை கொண்டுவருவதற்காகவே மத்திய அரசுடன் அதிமுக ஒற்றுமையுடன் இருக்கிறது.மக்களுக்கு ஏதாவது தீங்கு என்றால் மக்களோடு மக்களாக அதிமுக நின்று பேசும் என்று கூறினார்.