Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

“உங்க குழந்தைக்கு ஒரு வயசு ஆயிடுச்சா”… அப்ப இதெல்லாம் கட்டாயம் கொடுங்க… ஹெல்தியா வளர்வார்கள்..!!

ஒரு வயது குழந்தையின் உணவு என்பது மிகவும் கடினமானது. சிலவற்றை குழந்தைகளுக்கு தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும்.

சக்து அறிந்து பக்குவமாக சமைத்துக் கொடுக்கும் போது இருந்த ஆரோக்கியம் பதட்டமாய் நேரமின்றி சமைக்கும்போது இல்லை. இது பெரியவர்களிடம் மட்டுமல்ல, குழந்தைகளிடமிருந்து இந்த தாக்கம் உள்ளது. ஆனால் அம்மாக்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பிடித்த உணவு

ஒரு வருடத்தில் குழந்தைகளுக்கு பிடித்த உணவு எது என்பதை அம்மாக்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். முதல் குழந்தைகளுக்கு இனிப்பு உணவு தான் பிடிக்கும். அடுத்து தான் காரம் அடுத்து புளிப்பு இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு பிடித்த உணவை கொடுக்காமல் அவர்களுக்கு தேவையான வைட்டமின் உணவுகளை கொடுக்கவேண்டும்.

ஊட்டச் சத்து மிக்க உணவுகள், நார்ச்சத்து, புரதம், இரும்புச் சத்து ஆகியவற்றை தேர்வுசெய்து கொடுக்கவேண்டும். குழந்தைகள் உணவை மென்மையாக சுவைக்க பழகி இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் குழந்தையின் உணவில் சுவையை பழக்கங்கள் அப்படியான உணவுகள் குறித்து பார்க்கலாம்.

தாய்ப்பால்:

குழந்தை பிறந்து முதல் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தாய்ப்பாலுக்கு பிறகு உணவிலும் தாய்பாலை நிறுத்த வேண்டாம். குழந்தையின் 18 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் பற்றாக்குறை, குறைந்த அளவு தாய்ப்பால் என்ன பிரச்சினை ஏற்பட்டு இருக்கும் தாய்மார்கள்.பசும்பால் கொடுக்கலாம்.

மருத்துவரின் அனுமதி மிகவும் அவசியம். சில மாதங்கள் கழித்தே பசும்பாலை குழந்தைகளுக்கு பரிந்துரைப்பார்கள். காய்கறிகள் சூப் குழந்தைகள் ஆறு மாதம் ஆகும் போது சூப் பழகி இருப்போம். காய்கறிகளை நன்றாக மசித்து சிறிது கட்டியும் இல்லாமல் கொடுத்திருப்போம். ஆனால் குழந்தைகள் பல் முளைத்திருக்கும் மென்று சாப்பிட பழகி இருப்பார்கள். ஆனால் காய்கறிகளை மிகப் பொடியாக நறுக்கி நன்றாக வேகவைத்து சூப் செய்து கொடுக்கும்போது சூப்பில் காய்கறிகள் கூல் ஆகிவிடும். அதை நசுக்கி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

பழங்கள்

எல்லா குழந்தைகளும் பழங்களை சாப்பிடுவார்கள். முதலில் வாழைப்பழம் கொடுப்போம். ஆரஞ்சு சாறு, ஆப்பிள் சாறு போன்று மென்மையாக குழந்தைகளுக்கு பழகி குழந்தைகள் சரியாக கொடுக்க வேண்டும். பழங்களை கலந்து சாலட் ஆக கொடுக்க வேண்டாம். ஆனால் ஒரு பழங்கள் என்று சிறிதாக நறுக்கி கொடுக்கவேண்டும்.

ஒரு வயது என்றாலும் குழந்தையின் தொண்டை சிறிய அளவில்தான் இருக்கும். பழங்கள் சாப்பிடும் போது அவர்கள் தொண்டையில் அடைத்துக் கொள்ளும். அதனால் மிகப் பொடியாக நறுக்கி கொடுக்கவேண்டும்.

ஸ்னாக்ஸ்

பழங்கள் காலை நேரத்தில் ஸ்நாக்ஸ் மாலை நேரத்தில் கொடுக்க வேண்டும். தினமும் சுண்டல், பருப்பு, பயறு வகைகள், கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, முட்டை போன்றவற்றை வேக வைத்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது .

அசைவ உணவுகள் அசைவ உணவுகள் முதலில் முட்டை கிரேவி கலந்து கொடுக்கவேண்டும். சிக்கனை நன்றாக வேக வைத்து எலும்பு இல்லாமல் கொடுக்க வேண்டும். வெஜிடபிள் சூப் மற்றும் சிக்கன் சூப் செய்து கொடுக்கலாம். மட்டன் கொடுப்பதாக இருந்தால் மிகவும் நன்றாக வேகவைத்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு மீன் கொடுப்பதற்கு முன்பு மருத்துவரை ஆலோசித்த பின் கொடுக்க வேண்டும்.

கொடுக்கவே கூடாத உணவுகள்

குழந்தைகளுக்கு சுவை உணரும் என் காலகட்டத்தில் ஒரு நாள் தானே என துரித உணவுகளை கொடுக்க வேண்டாம். வேக வைக்காத காய்கறிகள், சாக்லேட், இனிப்பு வகைகள், பேக்கரி உணவுகளை பழக வேண்டாம். சில குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் கொடுத்தால் அவர்களுக்கு அந்த சுவை பழகி அதனை மீண்டும் மீண்டும் கேட்க தொடங்குவார்கள். இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்து.

Categories

Tech |