Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி பெயரில் புதிய கட்சி…. தொடங்கிய ரசிகர் மன்ற நிர்வாகிகள்…!!

நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அவருடைய ரசிகர்கள் புதிய கட்சியை தொடங்கி பரபரப்பை கிளப்பியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் முதலில் 2017 ஆம் வருடம் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அதன் பணியை கடந்த 2020ஆம் வருடம் ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக தான் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தார். இது அவருடைய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கத நிலையில் அவருடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அனைத்து இந்திய ரஜனி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி, அரசியலில் இரங்கி மக்களுக்கு சேவைகள் செய்ய முடிவு செய்துள்ளோம் என்று அவருடைய ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கட்சி கொடி, சின்னம், கொள்கை தொடர்புடைய மற்ற விஷயங்கள் பற்றி பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடம் கருத்து கேட்டு கன்னியாகுமரியில் வைத்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |