Categories
மாநில செய்திகள்

வாரத்தில் 6 நாட்களுக்கு பள்ளிகள் இயங்கும்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள் முதல் சனி வரை வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கட்டாயமாக கவசங்களை அணிய வேண்டும். பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சுற்றித் திரிய அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |