Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஈஸ்வரன்’ படம் வெற்றிபெற வேண்டும்… திருவண்ணாமலை கோவிலில் நடிகர் சிம்பு தரிசனம்…!!!

நடிகர் சிம்பு ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள படம் ஈஸ்வரன் . இது சிம்புவின் 45 வது படமாகும் . இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் . மேலும் பாரதிராஜா, பாலசரவணன் ,நந்திதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ளது .

திருவண்ணாமலை கோவிலில் நடிகர் சிம்பு தரிசனம் - ஈஸ்வரன் படம் வெற்றிபெற பிரார்த்தனை

இந்நிலையில் நடிகர் சிம்பு இன்று காலை 5 மணி அளவில் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார் . பின்னர் அங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். நாளை வெளியாகும் ஈஸ்வரன் திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதற்காக அங்கு சென்றுள்ளார். இந்த படத்தைக் காண சிம்பு ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர் .

Categories

Tech |