திருமணம் முடிந்த ஒன்றரை வருடங்களில் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகள் அப்ரோஸ். இவர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த யாசர் அராஃபத் என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பிரசவத்திறகாக அப்ரோஸ் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஆகிறது. இதற்கிடையே அப்ரோஸ் நேற்று முன்தினம் மாலை தனது தந்தையின் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அப்ரோஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒன்றரை வருடங்களில் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டதால் உதவி மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.