Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் போட்டு காட்டிய வீடியோ… கண்கலங்கும் ஹவுஸ் மேட்ஸ்..‌. வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ?என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினராக  வருகை தந்துள்ளனர் .

இன்று வெளியான இரண்டாவது புரோமோ வில் போட்டியாளர்களுக்கு நாடா காடா டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் பிக் பாஸ் வீட்டில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்களை வீடியோவாக போட்டு காட்டுகிறார் பிக்பாஸ். இதைப்பார்த்த போட்டியாளர்கள்  கண் கலங்குகின்றனர்.

Categories

Tech |