Categories
தேசிய செய்திகள்

FlashNews: கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கு இனி… அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர் புக் செய்த அதே நாளில் சிலிண்டர்களை வாங்கும் புதிய சேவையை அமல்படுத்த உள்ளது.

தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு தற்போது பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர் புக் செய்த அதே நாளில் சிலிண்டர்களை வாங்கும் புதிய தட்கல் சேவையை பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தட்கல் திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்த 30 முதல் 45 நிமிடங்களில் சிலிண்டர் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படும். இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறியுள்ளது.

Categories

Tech |