Categories
தேசிய செய்திகள்

மக்களே அச்சம் வேண்டாம்… இது ஆண்டுதோறும் வருவதுதான்… மத்திய அரசு…!!!

பறவை காய்ச்சல் ஆண்டுதோறும் வருவதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், புதிதாக பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதை கேரளாவிலிருந்து பரவத் தொடங்கி உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் தற்போது வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பறவை காய்ச்சல் குறித்து யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்றும், குளிர்காலங்களில் பறவைகளுக்கு இந்த நோய் ஏற்படுவது இயல்பு என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் இருந்து பறவைகள் வருவதால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இது நிகழ்வதாக விலங்கியல் துறை செயலாளர் அதுல் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |