Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சீக்கிரம் உதவி பண்ணுங்க… பயிர்களை பார்வையிட்ட கலெக்டர்… நிவாரணம் வழங்க நடவடிக்கை…!!

கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூடூர், பாலையூர், பெருந்தரக்குடி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனை அந்த மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பயிர்கள் குறித்த விவரங்களை விவசாயிகளிடமிருந்து கேட்டறிந்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா கூறும்போது, தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான அனைத்து நெற்பயிர்களும் மழை நீரில் மூழ்கியுள்ளன. எனவே மழை நீரில் மூழ்கிய நெற்பயிர் பரப்புகளை குறித்த கணக்கெடுப்பானது வேளாண்மை துறையினர் மூலமாகவே எடுக்கப்பட்டு வருகின்றது.

அதோடு வேளாண்மை துறை அலுவலர்கள் மூலம் இந்த மழைநீரை உடனடியாக வெளியேற்ற தேவையான அனைத்து வழிமுறைகளையும் விவசாயிகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் கள்ளிகுடி, கீழபாண்டி, திருத்துறைப்பூண்டி,கச்சனம் போன்ற பகுதிகளிலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதை நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹேமா நிர்மலா, துணை வேளாண்மை அலுவலர் காத்தையன், வேளாண்மை துறை துணை இயக்குனர் உத்ராபதி போன்றோர் அருகில் இருந்தனர்.

Categories

Tech |