Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொங்கல் வந்தாச்சு…. களைகட்டிய பானை விற்பனை… ஆர்வமுடன் குவியும் பொதுமக்கள்…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போன்ற நகர் பகுதிகளிலும் பொங்கல் பானைகள் விற்பனையானது அதிகளவில் உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை, கொசப்பேட்டை, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் ஏராளமான மண்பானைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. அதோடு ஓலைகள் மற்றும் விறகுகள் புறநகர் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு வீதிகளில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இவை அனைத்தையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரே பானையில் பொங்கலிட்டு மகிழ்வர்.

இதனால் சென்னை பகுதிகளில் பொங்கல் பானை விற்பனையானது சிறப்பாக உள்ளது. இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் சங்க தலைவர் சேம.நாராயணன் கூறும்போது, பொங்கல் பண்டிகையன்று புதுப்பானையில் பொங்கல் வைப்பதை பொதுமக்கள் சம்பிரதாயமாக கருதுவதால் தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் பொங்கல் பானை விற்பனையானது அதிகளவில் உள்ளது என கூறியுள்ளார். இதனையடுத்து மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழகத்தில் 4 லட்சத்திற்கும் மேல் உள்ளனர் என்றும், அவர்களில் ஒரு வாரியத்திற்கு 52 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்களின் தினசரி பயன்பாட்டில் மண்பாண்ட பொருட்களின் பங்கு குறைந்து போனாலும் பொங்கல் நாளன்று பொதுமக்கள் மண்பாண்டங்களில் வைத்து பொங்கலிடுவதையே அதிகளவில் விரும்புகின்றனர். இதனால் ஒரு மண்பானையின் விலை ரூபாய் 100 முதல் 200 வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் வர்ணங்கள் தீட்டாத சாதாரண பானைகள் 200க்கும், வர்ணங்கள் தீட்டப்பட்ட பானைகள் 5௦௦ ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். அதேபோல் ரூபாய் 100, 120 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டு மண் அடுப்புகளும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இந்த காலகட்டத்தில் பொதுமக்களுக்கு ஆரோக்கியம் கருதி மண்பாண்டங்களில் நீர் வைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதால், அதற்கேற்ற வகையில் மண்பானைகளில் நல்லிகள் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு வீடுகளில் பொதுமக்கள் வண்ணக் கோலங்களை போட்டு மகிழ்வதால் கலர் பொடிகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. மேலும் சென்னை போன்ற நகர் பகுதிகளில் பனை ஓலைகள் மினி லாரிகள் மூலம் புறநகர் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |