யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழீழ அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் ஜனவரி 8ஆம் தேதி இரவு இடிக்கப்பட்டதை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் உண்ணாவிரத போராட்டத்தை ஈடுபட்டு வந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து ஸ்ரீ சத்குணராஜா அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் மீண்டும் அமைக்க உத்தரவு வழங்கியுள்ளார்.
இந்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசு நினைவுத்தூண் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் கூறியதாவது சிங்கள இனவெறி மற்றும் அதன் அருவருப்பான முகத்தை மறைப்பதற்காகவும் இனப்படுகொலை நடந்ததற்கான தடயத்தை அழிக்கவும் அரசியல் உரிமைக்காக போராடியவர்கள் மற்றும் உயிர் விட்ட பொதுமக்களையும் நினைவில் நிறுத்தக் கூடாது என்ற காரணத்திற்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவுத்தூண் இடிக்கப்பட்டதை பார்க்க முடிகிறது. மேலும் தமிழ் மக்கள் மனதில் இந்த இனப்படுகொலை ஆறாத வடிவாகவும் சிங்கள இனவெறியை எரிக்கும் நெருப்பாகவும் என்றும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.