Categories
அரசியல் மாநில செய்திகள்

“சசிகலா ஜெ.வுடன் தவ வாழ்கை வாழ்ந்தவர்” அவரை தவறாக பேசுவதை…. பொறுத்துக்கொள்ள முடியாது – கோகுல இந்திரா…!!

சசிகலாவை பற்றி தவறாக பேசுவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா விடுதலை ஆக உள்ளார். இதனால் அதிமுக அரசில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் சசிகலாவை பற்றி தவறாக பேசுவது என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், அவர் எங்கிருந்தாலும் தாங்கள் மரியாதையுடன் போற்றுவோம் என்றும் அதிமுக அமைப்புச் செயலாளர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சரையும், பெண்களையும் இழிவாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை கண்டித்து சென்னை அண்ணா நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கோகுல இந்திரா செய்தியாளர்களை சந்தித்தபோது, “சசிகலா ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் என்றும் ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர்” என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |