ஜோ பைடன் பதவியேற்பதற்குள் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எப்.பி.ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிபர் டிரம்ப் தோல்வியை தழுவினார். இதையடுத்து பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் பைடன் மற்றும் கமலா ஹரிஷ் வரும் 20ஆம் பதவியேற்கவுள்ளனர். இதையடுத்து டிரம்ப் ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்கக் கூடிய நாடாளுமன்றத்திற்குள் ஊடுருவிய கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர் வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ட்ரம்ப் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது. இதற்குள் ட்ரம்ப் வேறு ஏதேனும் விபரீத முடிவுகளை எடுத்து விடுவாரோ? என்று பலரும் பயப்படுகின்றனர்.
மேலும் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபடலாம் என்று எப்.பி.ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதனால் பைடன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ எச்சரித்துள்ளது.இதன் காரணமாக பைடனுக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, வெள்ளை மாளிகையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பதவியேற்பின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ராணுவத்தினை நன்கு கண்காணிக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.