இனி வீட்டிலிருந்தே ஆதார் அட்டையில் எதுவேண்டுமானாலும் திருத்தம் செய்து கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது.
ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் முக்கிய ஆவணமாகும். அனைத்து தேவைகளுக்கும் ஆதார் அட்டை ஒரு ஆதாரமாக பயன்படுகிறது. இதில் நம்முடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி ஆகியவை அனைத்தும் சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் மற்ற வேண்டும். இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்களுக்கு மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை UIDAI வெளியிட்டுள்ளது.
அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பாலினத்தை எளிதாக மாற்றலாம் uidai.gov.in / images / AdharHandbook2020.pdf இல் ஆதார் கார்டு PDF கோப்பு உள்ளது. இந்த கையேட்டில் ஆதாரில் பெயரை மாற்றுவதில் இருந்து எந்த வகையான திருத்தங்களையும் செய்யலாம் என்ற முழுமையான விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆவணமில்லாமல் ஈமெயில் ஐடியை மாற்றலாம் அல்லது சேர்க்கலாம். இதற்கு ஆதார் சேவா கேந்திரா ரூபாய் 50 வசூலிக்கும்