Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா அச்சம்…. நீங்க யாரும் வரவேண்டாம்…. பக்தர்கள் ஏமாற்றம்….!!

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு இரு நாட்டு பக்தர்களும் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கச்சதீவு இயற்கை எழில் மிகுந்த இடமாகவும் 287 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாகவும் உள்ளது. கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டாலும் நம்முடைய நாட்டை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கும் போது வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் அதனை பயன்படுத்திக் கொள்ள உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. கச்சத் தீவில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் இருநாட்டு பக்தர்களுக்கும் ஒரு முக்கியமான வழிபாட்டுத் தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி கடைசியில் அல்லது மார்ச் முதலில் இரண்டு நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும். திருவிழாவில் இந்தியா இலங்கை என இரு நாட்டு மக்களும் கலந்து கொள்வர். இந்த ஆண்டு அந்தோணியார் ஆலய திருவிழா பிப்ரவரி மாதம் 26 27 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக யாழ்ப்பாணத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு இரு நாட்டை சேர்ந்த பக்தர்களும் அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு கலந்து கொள்ள முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |