டெல்லியில் ஆப் பாயில் முட்டைக்கு தடை விதித்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், புதிதாக பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதை கேரளாவிலிருந்து பரவத் தொடங்கி உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் தற்போது வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் ஆப் பாயில் முட்டைக்கு தடை விதித்த அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் சரியாக வேக வைக்கப்படாத முட்டைகள், கோழி இறைச்சிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க கூடாது என்று உணவகங்களுக்கு டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.