Categories
மாநில செய்திகள்

Breaking: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தற்போது மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் இன்னும் முழுமையாக தரவுகளை தமிழக அரசு அறிவிக்கவில்லை. சில நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு இன்னும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜனவரி 17 முதல் 19ஆம் தேதி வரை அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி பொதுக்கூட்டங்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்த நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |