தமிழகத்தில் நம் தமிழர் திருநாளில் தன்னம்பிக்கை பொங்கட்டும் என கமல் ஹாசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள். தமிழகம் முழுவதிலும் பொங்கல் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் பொங்கல் என்றாலே ஊர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். அவ்வாறு தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அதன்படி நாம் தமிழர் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அச்சத்தில் இருந்து துணிவுக்கு.. ஊழலில் இருந்து நேர்மைக்கு… தீமைகளிலிருந்து நன்மைக்கு செல்லும் பயணத்தை தொடங்கி இருக்கிறோம். பாதையில் உற்சாகம் பொங்கட்டும். நம் தமிழர் திருநாளின் தன்னம்பிக்கை பொங்கட்டும். அதன் குறியீடாக பொங்குக பொங்கல்” என்று கமல் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.