தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும். எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரையில் லேசான மழை பெய்யும். கடலில் காற்று வேகமாக வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.