சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் குறித்த தகவல் கசிந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் நான்காவது சீசன் நிறைவு பெறும் நிலையில் உள்ளது . இந்த சீசன் கொரோனா தாக்கம் காரணமாக மிகத் தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி ,ரியோ, அறந்தாங்கி நிஷா ,பாலாஜி , சுரேஷ் ,அனிதா ,சனம் ,ரேகா ,வேல்முருகன், சம்யுக்தா உட்பட 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் . இவர்களில் ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர் . தற்போது இறுதிப்போட்டிக்கு ரியோ ,ஆரி ,ரம்யா, கேபி ,சோம் ,பாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வருகிற ஜனவரி 17-ஆம் தேதி இறுதிப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனில் டைட்டிலை வெல்லப் போவது யார் ?என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது . இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மக்களின் வாக்குகள் மூலம் ஆரி இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . ஆரம்பத்தில் இருந்தே ஆரிக்கு ரசிகர்களும் பல பிரபலங்களும் ஆதரவளித்து வரும் நிலையில் இவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ? என்பது வருகிற ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் தான் தெரியவரும்.