Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மூணு வருஷம் ஆகிட்டு…. லேப்டாப் தாங்க…. போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்….!!

லேப்டாப் வழங்க கோரி போராட்டம் நடத்தியபோது வந்த அமைச்சரின் காரை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2017-18 ஆம் ஆண்டில் பிளஸ்2 படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 2017-18 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு வந்த கிராமத் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரனின் காரை மாணவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்பு மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரி அமுதா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு எல்லோரும் கலைந்தனர்.

Categories

Tech |